பாவ அறிக்கை ஜெபம் Confession Prayer in Taml

பொதுவான பாவ அறிக்கை ஜெபம்:
எங்கள் தந்தையாம் கடவுளே, நினைவினாலும் வார்த்தையினாலும் செய்கையினாலும் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறோம். முழு மனதோடு நாங்கள் உம்மை நேசிக்கவில்லை; எங்களிடத்தில் நாங்கள் அன்பு கூறுவது போல அயலாரிடத்தில் நாங்கள் அன்புகூற வில்லை. எங்கள் மேல் இரக்கமாயிருக்க உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்; எங்கள் பாவ அழுக்கை நீக்கி எங்களை சுத்திகரியும். எங்கள் குற்றங்களை விட்டுவிட எங்களுக்கு உதவி புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம் பிதாவே. ஆமென்.

Post a Comment

0 Comments