![]() |
| Rev. William Clark Missionary |
வில்லியம் கிளார்க் 1822 ஆம் ஆண்டு நவம்பர் 24 இல் இங்கிலாந்தில் பிறந்தார். அவர் இஸ்லிங்டனில் உள்ள சி.எம். கல்லூரியில் (C.M. College) கல்வி கற்றார், மேலும் 1847 இல் லண்டன் ஆயரால் (Bishop of London) உதவி குருவாக (deacon) திருநிலைப்படுத்தப்பட்டார்.
மே 20, 1848 அன்று, அவர் இந்தியாவுக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டார். அடுத்து திருநெல்வேலிக்குச் சென்றார். அவர் 1851 இல் மெட்ராஸ் ஆயரால் குருவாக (priest) திருநிலைப்படுத்தப்பட்டார்.
அவர் 1848 முதல் 1866 வரை திருநெல்வேலியில் நல்லூர் சர்க்கிள் பகுதியில் பணியாற்றினார்.
இவர் காலத்தில் தான் நல்லூரில் கல்வி நிறுவனம் கட்ட இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது CSI ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவிலூத்து ஆலயக் கட்டுமானத்தில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவிலூத்து Rev. வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் இவர் வாங்கிய இடத்தில் தான் 170 ஆண்டுகளுக்குப் பின்பு கட்டப்பட்டு, இவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிலோனுக்கு (இலங்கை) மாற்றப்பட்டு 'தமிழ் கூலி மிஷன்' (Tamil Cooly mission) பொறுப்பை ஏற்றார். 1880 இல் அவர் திருவிதாங்கூருக்குச் சென்றார்;
தனது இறைப்பணிக்குப் பிறகு, அவர் தனது தாயகம் திரும்பி ஓய்வு பெற்றார். 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் தனது 93 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

0 Comments