அணைந்த மெழுகுவர்த்தியிலிந்து அணையாத ஒரு கேள்வி • தமிழ்க் கவிதை • Sanjay's Kavithai

    அணைந்த மெழுகுவர்த்தியிலிந்து   
    அணையாத ஒரு கேள்வி !

மன்னவர் இயேசுவின்
மாறாத சத்தியத்தை
மாலோகம் முழுவதும் பறைசாற்ற
மாதேவன் பயன்படுத்திய பாத்திரங்களே - இந்த
மெழுகுவர்த்திகள் !

ஆம்!
மிஷனெரிகளே அந்த மெழுகுவர்த்திகள்...

பரலோக சத்தியத்தை அறிவித்து...
பாரதமெங்கும் ஒளிவீசி - இந்த பூலோக
பயணம் முடித்த பொழுது....
பரமனின் பாதம் பறந்தேகினர்..

ஆனாலும்,
அவர்களுக்குள்ளும் ஒரு கேள்வி !
ஆண்டவர் அன்பை
இந்திய தேசம் ஏற்றுக்கொண்டபோதும்,
ஈசன் இயேசுவே
உலக மீட்பர் என்னும் நித்திய
ஊற்றின்,
எழுப்புதல் அக்கினி 
ஏழை மக்களிடம் எப்போது பற்றியெரியுமோ ?
ஐயமின்றி
ஒரே தேவன் என்றும்
ஓர் மானிடனே அவர் அவதாரம் என்றும் 
எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறதோ ?
இந்த பாரத தேசம் முழுவதும்.

எழுதியவர்
சஞ்சய்
மேலபட்டமுடையார்புரம் 
குறிப்பு:
TDYA Koinoniya 2026 இல் முதல் பரிசு பெற்ற கவிதை

Post a Comment

0 Comments