22. மேய்ப்பர்கள்: முதன்மையான கொண்டாட்டம் Christmas Message on Shepherds

கிறிஸ்துமஸ் செய்தி 22
மேய்ப்பர்கள்: முதன்மையான கொண்டாட்டம்
லூக்கா 2: 8 - 20

1. பயணித்த மேய்ப்பர்கள்
லூக்கா 2:15
(பயணம் - நம்பிக்கையின் வெளிப்பாடு)

2. பணிந்த மேய்ப்பர்கள்
லூக்கா 2: 16
(கண்டார்கள் - பணிவதின் அடையாளம்)

3. பறைசாற்றிய மேய்ப்பர்கள்
லூக்கா 2: 17 - 18
(பிரசித்தம் - பரப்புதல்)

பின்னணி
பெத்லகேம் என்பது தாவீது பிறந்த ஊர் மட்டுமல்ல, எருசலேம் தேவாலயத்தில் தினசரி பலிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஆடுகள் வளர்க்கப்படும் பகுதியாகவும் இருந்தது; எனவே, அந்த இரவில் வயல்வெளியில் ஆடுகளைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்கள், தம்மைப் பலியாகக் கொடுக்க வந்த 'தேவ ஆட்டுக்குட்டியான' இயேசுவைக் காண்பதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தனர். ஆனால், அக்கால இஸ்ரேல் சமுதாயத்தில் மேய்ப்பர்கள் எளிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினராகக் கருதப்பட்டனர்; இரவு பகலாகக் கடினமாக உழைத்தாலும் அவர்களுக்குச் சமூக அந்தஸ்தோ அதிகாரமோ இருக்கவில்லை, சில நேரங்களில் அவர்களின் சாட்சி கூடச் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டது. ஆனாலும், உலகத்தின் இரட்சகர் பிறந்த நற்செய்தியை முதலில் கேட்கும் பாக்கியத்தைத் கடவுள் இந்த எளிய மேய்ப்பர்களுக்கே வழங்கினார். 

Prepared by 
Meyego 

Post a Comment

0 Comments