திருமறையில் யார் இவர் யாரோ? - 182
புதிய ஏற்பாட்டு பெயருள்ள பெண்கள் - 07
மரியாள் (கிலெயோபாவின் மனைவி) : கடினமான சூழலில் உடன்நிற்றல்
1. பெயர்: மரியாள் (கிலெயோபாவின் மனைவி) Mary, wife of Cleophas
2. அர்த்தம்: 'மரியாள்' என்பது எபிரெய மொழியில் 'மிரியாம்' (Miryam) என்ற பெயரிலிருந்து வந்தது; இதன் பொருள் குறித்து அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ளன; பொதுவாக 'அன்பானவள்', 'விரும்பப்பட்ட பிள்ளை', அல்லது 'கசப்பு' (Mar) என்ற பொருள்களில் விளக்கப்படுகிறது. 'கிலெயோபா' (Cleophas) என்ற பெயர் கிரேக்கத்தில் க்ளியோபாஸ் (Klopas) என வருகிறது; இது அரமாயிக்/எபிரெய மொழியில் க்லீப்பா (Clopas) அல்லது எலியோபா என்பதன் வடிவமாகக் கருதப்படுகிறது.
4. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
யோவான் 19:25 – இயேசுவின் சிலுவையண்டை நின்ற பெண்களில், இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும், கிலெயோபாவின் மனைவியாகிய மரியாளும், மகதலேனா மரியாளும் குறிப்பிடப்பட்டிருத்தல்.
தொடர்புடைய ஒப்பீட்டுக் குறிப்புகள் (மத்தேயு 27:56; மாற்கு 15:40, 47; 16:1; லூக்கா 24:10)
4. வரலாற்றுக் குறிப்புகள்:
கிலெயோபா என்பவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவராகவோ, அல்லது லூக்கா 24:18-ல் வரும் எம்மாவு வழியில் இயேசுவைக் கண்ட இரண்டு சீஷர்களில் ஒருவராகிய 'கிலெயோப்பா' (Cleopas) என்பவராகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
• தொடக்கக்கால கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஹெகெசிப்பஸ் (Hegesippus) கூற்றுப்படி, கிலெயோபா என்பவர் புனித யோசேப்பின் சகோதரர் ஆவார். இதனால், கிலெயோபாவின் மனைவியான மரியாள் அன்னை மரியாளின் மைத்துனியாகவும் (சகோதரி முறையிலும்), இயேசுவின் பெரியம்மா அல்லது சித்தி முறையிலும் உறவினராகிறார்.
• இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, இவர் ஆதித் திருச்சபையின் வளர்ச்சிக்காக நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபட்டார். சில மரபுகளின்படி, இவர் லாசர் மற்றும் மகதலேனா மரியாளுடன் சேர்ந்து பிரான்ஸ் நாட்டின் கடற்கரைப் பகுதிக்குச் சென்றதாகவும், வேறு சில மரபுகளின்படி ஸ்பெயின் நாட்டில் நற்செய்திப் பணி ஆற்றியதாகவும் கூறப்படுகிறது.
• கிலெயோபா மற்றும் மரியாள் தம்பதியருக்குப் பிறந்த சிமியோன் (Symeon), இயேசுவின் சகோதரர் யாக்கோபுவின் மறைசாட்சி மரணத்திற்குப் பிறகு எருசலேம் திருச்சபையின் இரண்டாவது ஆயராகப் பொறுப்பேற்றார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்: கிலெயோபாவின் மனைவியாகிய மரியாள், குடும்ப அடையாளத்தோடு மட்டுமல்லாமல், இயேசுவின் பாடுகளும் மரணமும் நிகழ்ந்த கொடிய வேளையிலும் சிலுவையின் அருகில் நிலைத்து நின்ற விசுவாசத்தைக் காட்டுகிறார்.
இறையாசி உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம் 9486810915 தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil Tamil Christian Messages Daily Devotion Tamil Bible History Tamil Today's Bible Verse Tamil Tamil Daily Devotion
0 Comments