என் வாழ்வில் நீங்கா இடத்தை நீ பிடித்தாயே
ஆண்டவரின் அருளால் எனக்கும் சில காலம்
உன்னுள் முதலாக வரும் பாக்கியம் கிடைத்ததே
இறைப் பணியை உன் வாயிலாக நான் செய்தது
என்னில் இன்னும் நினைவாய் இருக்கின்றதே
சரித்திரம்மிக்க உன் கம்பீரமான ஆலயமணியை
நானும் அடித்து சபையை அழைத்ததும் பாக்கியமே
என்னை உருமாற்றியது நீயே! என் இறை வீடே!
நானும் யாக்கோபு போல் இறைவனைக் கண்டேனே
என்னை உருவாக்கியதும் நீயே! என் தாய் சபையே!
நான் இறைவனைப் போற்றி நிதம் மகிழ்கின்றேன்
எத்தனை சூழ்நிலைகளை வாழ்வில் கடந்தாலும்
பெத்தேலை நோக்கினால் இறை அருள் கிட்டுமே
எத்துணை ஆசீர்வாதங்கள் எத்துணை நன்மைகள்
எண்ணி எண்ணி பார்த்து நன்றி நவில்கின்றேன்
நூறாண்டு காணும் உன்னை பார்த்து பார்த்து
நானும் வியக்கின்றேன் வியந்து பூரிக்கின்றேன்
உன்னிலுள்ள இறை மகிமை எங்களில் தொடரட்டும்
உன்னால் அநேகர் வாழ்வடைய நீ வாழிய வாழியவே!!
மண்ணின் மைந்தர்
0 Comments