தியோத்ரேபு • Diotrephes Biblical Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 161
தியோத்ரேபு: பதவியைத் தேடாதே.

1. பெயர்:  
தியோத்ரேபு • Diotrephes

2. அர்த்தம்: 
"வியாபகமான அல்லது கடவுளால் வளர்க்கப்பட்டவர்"

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
3 யோவான் 1:9
— "சபையிலே முதன்மையாக இருக்க விரும்புகிற தியோத்ரெபே என்பவன் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை."

4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஆதி திருச்சபைக் காலத்தில், தன் சுயநலத்துக்காகவும் பெருமைக்காகவும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற ஒரு தலைவர்.
• அப்போஸ்தலனாகிய யோவானின் அதிகாரத்தையும், அவர் அனுப்பிய நிருபங்களையும் மதிக்க மறுத்தான்.
• தன் சபைக்கு வரும் விசுவாசிகளை வரவேற்காதது மட்டுமல்லாமல், மற்றவர்களை வரவேற்க விரும்பியவர்களையும் சபையை விட்டு வெளிநடப்புச் செய்த பிடிவாதக்காரன்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தியோத்ரெபேபுதன் சுயநலத்துக்காகவும் தலைமைக்காகவும் எப்படிக் கெட்ட பெயர் வாங்கினான் என்பதைப் பார்த்தோம். பதவியைத் தேடாமல், கொடுக்கப்பட்ட இடத்திலே நம் கடமையைச் சரியாகச் செய்தாலே அந்த இடத்தின் மதிப்பு தானாக உயரும்.சபையில் தலைமைப் பதவியோ அதிகாரமோ முக்கியமல்ல; மாறாக, கிறிஸ்து காட்டிய தாழ்மையும் அன்பும்தான் திருச்சபையைக் கட்டியெழுப்பும். 

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments