காயு: மகிழ்வித்து மகிழ்
1. பெயர்:
காயு Gaius
2. அர்த்தம்:
மகிழ்ச்சிக்குரியவர் (Rejoicing / Glad)
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
3 யோவான் 1:1: முதியவராகிய யோவான் அப்போஸ்தலன் "அன்பான காயுவுக்கு எழுதுகிறதாவது" என்று குறிப்பிட்டுள்ளார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• யோவான் நிருபத்தில் குறிப்பிடப்படும் காயு, அப்போஸ்தலனாகிய யோவானால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு விசுவாசி ஆவார்.
• இவர் சத்தியத்தின்படி நடந்து, கடவுளின் பிள்ளைகளுக்கும் அந்நிய விசுவாசிகளுக்கும் அன்புடனும் தாராள மனதுடனும் விருந்தோம்பல் செய்து வந்தார்.
• ஊழியம் செய்யப் புறப்பட்ட தேவப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, திருச்சபையின் நற்சாட்சியைப் பெற்ற உத்தம விசுவாசியாகத் திகழ்ந்தார்.
• இவருடைய ஆத்துமா வாழ்வது போல, இவன் எல்லாவற்றிலும் நலம் பெற்று சுகமாயிருக்கும்படி யோவான் இவருக்காக வேண்டிக்கொண்டார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
மற்றவர்களுக்குச் செய்யும் உதவி மற்றும் உபசரிப்பு என்பது வெறும் கடமை அல்ல; அது தேவனுடைய சத்தியத்தின்படி நடப்பதற்கான அடையாளம். விசுவாசத்தில் நிலைத்திருந்து, பிறருக்கு ஆதரவளிக்கும் தாராள மனது தேவ சமூகத்தில் என்றும் நற்கீர்த்தியைப் பெற்றுத் தரும். குறிப்பாக, தேவப் பணியாளர்களையும் ஊழியர்களையும் தாங்குவதும் மகிழ்விப்பதும் ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion
0 Comments