நீங்கள் விசேஷித்தவர்கள் • You are Special •ரோமர் 13:12 Romans

திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  பெந்தெகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் 23 -ஆம் ஞாயிறு (22-ஆம் திரித்துவ ஞாயிறு)
தேதி: 01-11-2026
வண்ணம்: பச்சை 
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: தானியேல் 3:16-30
புதிய ஏற்பாடு: பிலிப்பியர் 2:14-16
நற்செய்தி பகுதி: மத்தேயு 3:13-16
சங்கீதம்: 119:9-16

2. திருவசனம்
2.1 தலைப்பு: நீங்கள் விசேஷித்தவர்கள் 
2.2 இருப்பிடம்: ரோமர் 13:12
2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்)   இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 
(திருவிவிலியம்) : இரவு முடியப்போகிறது: பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
உலக ஞாயிறு பள்ளி தினம் - நவம்பர் முதல் ஞாயிறு 

4. வசன குறிப்புகள்
4.1 நூலாசிரியர்: அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல்
4.2 அவையோர் : 
ரோம் நகரில் உள்ள திருச்சபைகள், யூதர் மற்றும் யூதரல்லாதோர் 
4.3 வசன பின்னணி:
ரோமர் 12 முதல் 15 அதிகாரங்களில் நற்செய்தியை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட மக்களின் மாற்றுருவாக்கமடைந்த கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று பவுல் அடிகளார் கூறுகிறார். அதில் அதிகாரிகளிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்றும் அன்பு எனும் கட்டளையை இடம் சூழல் காலம் அறிந்து எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பவுல் அடிகளார் விளக்கும்போது சொல்லப்பட்ட வசனம். 

5. திருவசன விளக்கவுரை
 இரவு பகல் என்ற உருவகங்களைப் பயன்படுத்தி பவுல் அடிகளார் இங்கு காலத்தை அறிந்து வாழ வலியுறுத்துகிறார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நமது இரட்சிப்பு முழுமையாய் நிறைவேற, நாம் முதலாவது இருளைப் பாராமல், பகலவனாகிய இயேசுவின் முகத்தை எதிர்நோக்க வேண்டும் (V.12 a). உலகம் மாமிசம் போன்ற இருளின் கிரியைகளை கழற்றி எறிந்து விட வேண்டும் .(ἀποτίθημι - ஆடையை கழற்றுதல் V.12 b). இயேசு கிறிஸ்து காட்டிய அன்பின் வழியில் கட்டளைகளை நிறைவேற்றும்படிக்கு இயேசுவை நமது வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் அணிந்து கொள்ள வேண்டும். (ἐνδύω - ஆடையை அணிதல் அல்லது ஆடையினால் போர்த்தப்படுதல் V.12 c). 

இரட்சிப்பு என்பது நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அந்த ஒரு நாளில் மட்டும் பெறும் அனுபவமல்ல. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நாம் அவரோடு சேர்ந்து வாழும் வரை தினமும் புதுப்பிக்கப்பட வேண்டிய அனுபவம் என்பதை பவுல் அடிகளார் இங்கு விளக்குகிறார். ஆண்டவரால் விசேஷித்தவர்களாக வாழும்படி அழைக்கப்பட்ட நாம், நமது அனுதின வாழ்வில் இயேசுவை வெளிப்படுத்த வேண்டும். 

7. அருளுரைக் குறிப்புகள் :
விசேஷித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்: 
அ) இயேசுவை எதிர்நோக்குபவர்கள் - ரோமர் 13:12 a
ஆ) இகத்தின் கிரியைகளை ஒழிப்பவர்கள் - ரோமர் 13:12 b 
இ) இயேசுவை வெளிப்படுத்துபவர்கள் - ரோமர் 13:12 c

எழுதியவர்
கிறிஸ்து ராசையா 
சபை ஊழியர்.

Post a Comment

0 Comments