திருமறையில் யார் இவர் யாரோ? - 146
இமெனே: கப்பற்சேதம் வேண்டாமே
1. பெயர்:
இமெனே • Hymenaeus
2. அர்த்தம்:
பாடிப் புகழப்படுபவன்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
1 தீமோத்தேயு 1:19-20 மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஏற்கனவே நடந்துவிட்டது" என்று கூறி, ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை மட்டுமே ஏற்றுக்கொண்டு உடலின் உயிர்த்தெழுதலை மறுக்கும் தவறான போதனையைப் பரப்பினார்.
2 தீமோத்தேயு 2:17-18 விசுவாசத்தைக் கவிழ்த்தல்: இவரது போதனைகள் விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, சிலருடைய விசுவாசத்தைக் குலைத்துப்போடும் அளவுக்குத் தீமை விளைவித்தன.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• தவறான உபதேசம்: இமெனே ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாக இருந்தபோதிலும், பிற்காலத்தில் சத்தியத்தைவிட்டு விலகினார்.
• சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்படுதல்: அப்போஸ்தலன் பவுல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்கள் தேவ துஷ்பிரயோகத்திலிருந்து விலகி மனந்திரும்பும் பொருட்டு சபையிலிருந்து விலக்கி வைத்து, அவர்களைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தார். (இது சபை ஒழுங்குமுறை மற்றும் கண்டித்தலின் தீவிரமான நிலையைக் குறிக்கிறது).
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இமெனே விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் கைவிட்டதினால் தனது ஆவிக்குரிய வாழ்க்கையில் கப்பற்சேதமடைந்தான். தவறான போதனைகளும் உலகப்பிரகாரமான வீண் வார்த்தைகளும் விசுவாசத்தை விட்டு விலகச் செய்துவிடும்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion
0 Comments