திருமறையில் யார் இவர் யாரோ? - 149
எர்மொகெனே: எப்போது உடனிருக்கிறோம்?
1. பெயர்:
எர்மொகெனே Hermogenes
2. அர்த்தம்:
"புதன் தேவனின் வழித்தோன்றல்" (Born of Mercury / Mercurian)
மதிப்புக்குரிய மற்றும் உறுதியானவர் (Honorable and Steadfast)
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
2 தீமோத்தேயு 1:15 இக்கட்டான சூழ்நிலையில், ஆபத்துக்கு பயந்தும், உலகப்பிரகாரமான அவமானத்திற்கு அஞ்சியும் ஆசியா நாட்டிலிருந்த மற்றவர்களைப் போலவே இவரும் பவுலை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
•எர்மொகெனே என்பவர் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிறித்தவர் ஆவார்.
முற்காலத்தில் இவர் அப்போஸ்தலனாகிய பவுலோடு இணைந்து சுவிசேஷப் பணியில் இருந்தார்.
பவுல் ரோமாபுரியில் இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்டு, சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் இருந்த போது விலகி சென்றார்.
• இவர் தனது விசுவாசத்தை முற்றிலுமாக இழந்தார் என்பதற்கு வேதத்தில் நேரடிச் சான்றுகள் இல்லை என்றாலும், சோதனையின் காலத்தில் தேவனுக்காகப் பாடுகளைச் சகிக்கத் துணிவின்றி அப்போஸ்தலனைக்கைவிட்டு விலகினார் என்பது வரலாற்றுப் பதிவாகும்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சுகத்திலும் செழிப்பிலும் மாத்திரமல்ல, நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பாடுகளிலும், நெருக்கடியான வேளையிலும் கடவுளின் பணியாளர்களோடு கூட நிற்பதே உண்மையான அர்ப்பணிப்பு.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion
0 Comments