பாரம்பரியத்தின் மேன்மை: திருச்சபை மரபுகளும் அதன் வேதாகம உண்மைகளும்
முன்னுரை:
கிறிஸ்தவ விசுவாசம் என்பது திடீரென்று வானத்திலிருந்து குதித்ததல்ல; அது இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றையும், அப்போஸ்தலர்களின் போதனைகளையும் நங்கூரமாகக் கொண்டது. முக்கிய திருச்சபைகளில் (Main-line Churches) காணப்படும் பாரம்பரியங்கள் மற்றும் மரபுகள் வெறும் மனிதக் கற்பனைகள் அல்ல, அவை பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் உருவானவை.
முக்கிய திருச்சபைகளில் (Main-Line Churches) பின்பற்றப்படும் பாரம்பரியங்கள் வெறும் சடங்குகள் அல்ல; அவை வேதாகம அடிப்படையைக் கொண்டவை.
சுயாதீன திருச்சபைகள் (Independent Churches) இவற்றை விமர்சிப்பது பாரம்பரியங்களுக்குப் பின்னால் உள்ள ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ளாததே காரணமாகும். சுயாதீன திருச்சபைகளின் விமர்சனங்களுக்கு அப்பால், இந்த பாரம்பரியங்கள் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்வை எவ்விதம் செழுமைப்படுத்துகின்றன என்பதை வேதாகம ஆதாரத்தோடு ஆழமாகப் பார்ப்போம்.
1. பாரம்பரியத்தின் வேதாகம அடிப்படை
சுயாதீன திருச்சபைகள் பாரம்பரியத்தை மனித கற்பனை என்று கருதுகின்றன. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் பாரம்பரியங்கள் வேதாகம சத்தியங்களைப் பாதுகாக்கும் வேலி என்று கூறுகிறார்:
(1 கொரிந்தியர் 11:2 • 1 Corinthians 11:2) சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.
Now I praise you that ye remember me in all things, and hold fast the traditions, even as I delivered them to you.
(கலாத்தியர் 1:14 Galatians 1:14) என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
.... and I advanced in the Jews' religion beyond many of mine own age among my countrymen, being more exceedingly zealous for the traditions of my fathers.
(2 தெசலோனிக்கேயர் 2:15 • 2 Thessalonians 2:15 ) ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
So then, brethren, stand fast, and hold the traditions which ye were taught, whether by word, or by epistle of ours.
(2 தெசலோனிக்கேயர் 3:6 • 2 Thessalonians 3:6) மேலும், சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
Now we command you, brethren, in the name of our Lord Jesus Christ, that ye withdraw yourselves from every brother that walketh disorderly, and not after the tradition which they received of us.
வேதாகமம் முழுமையான புத்தகமாகத் தொகுக்கப்படுவதற்கு முன்பே, திருச்சபை அப்போஸ்தலர்களின் போதனைகளையும் வழிபாட்டு முறைகளையும் பாரம்பரியமாகவே பின்பற்றி வந்தது. பாரம்பரியம் என்பது விசுவாசக் கோட்பாடுகள் சிதையாமல் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் ஒரு பாதுகாப்புப் பெட்டகமாகும்.
2. வழிபாட்டு ஒழுங்கு (Liturgy)
முக்கிய திருச்சபைகளில் (Main-Line Churches) வழிபாடு ஒரு குறிப்பிட்ட வரிசையில் (Order of Service) நடக்கும். இது குழப்பத்தைத் தவிர்த்து, கர்த்தரைப் பயபக்தியுடன் worship செய்ய உதவுகிறது.
வேதாகம ஆதாரம்:
"சகலமும் செவ்வையாயும் ஒழுங்காயும் செய்யப்படக்கடவது" (1 கொரிந்தியர் 14:40).
முக்கிய திருச்சபைகளின் வழிபாட்டு முறை ஏனோதானோ என்று நடப்பதில்லை. ஏசாயா 6 மற்றும் வெளிப்படுத்துதல் 4-ஆம் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள பரலோக வழிபாட்டைப் போலவே, பூமியிலும் ஒரு புனிதமான ஒழுங்கு பின்பற்றப்படுகிறது. இது வழிபாட்டில் மனித உணர்ச்சிகளை விட கடவுளுடைய மகிமைக்கே முன்னுரிமை அளிக்கிறது.
3. குருவானவர்கள் அணியும் ஆடைகள் (Vestments)
முக்கிய திருச்சபைகளில் குருவானவர்கள் அணியும் சிறப்பு ஆடைகள் தனிமனிதனை உயர்த்த அல்ல, அவர்கள் செய்யும் பணியின் புனிதத்தைக் குறிக்கவே அணிவிக்கப்படுகின்றன.
வேதாகம ஆதாரம்:
ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் வழிபாட்டிற்கென்று பிரத்யேகமான ஆடைகளைச் செய்ய கடவுள் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 28:2).
குருவானவர் அங்கி அணியும்போது அவரது தனிப்பட்ட அடையாளம் மறைக்கப்பட்டு, கிறிஸ்துவின் பணி முன்னிலைப்படுத்தப்படுகிறது. வெள்ளை அங்கி கிறிஸ்துவின் தூய்மையையும், கழுத்துப்பட்டை (Stole) அவர் சுமக்கும் கிறிஸ்துவின் நுகத்தையும் நினைவூட்டுகின்றன.
4. விசுவாசப் பிரமாணங்கள் (Creeds)
அப்போஸ்தல மற்றும் நிசேயா விசுவாசப் பிரமாணங்கள் போன்றவற்றைச் சொல்லும்போது, நாம் எதை நம்புகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
வேதாகம ஆதாரம்:
மனுஷனுடைய தப்பிதங்களுக்கு ஏதுவான போதனையாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்... (எபேசியர் 4:14).
இந்த விசுவாசப் பிரமாணங்கள் கள்ளப்போதனைகளை நம் சபைகளுக்குள் நுழையாமல் தடுக்கும் ஒரு "விசுவாசக் கோட்டை" ஆகும். அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் போன்றவற்றை உச்சரிக்கும்போது, நாம் ஏதோ ஒரு தனிச் சபையல்ல, மாறாக உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் காலப் பரிசுத்தவான்களோடும் இணைந்து ஒரே விசுவாசத்தில் நிற்கிறோம் என்பதைப் பறைசாற்றுகிறோம்.
6. விவிலியத் தொகுப்பும் (Canon) பாரம்பரியத்தின் அவசியமும்
சுயாதீன திருச்சபைகள் "வேதாகமம் மட்டுமே" (Sola Scriptura) என்ற கொள்கையை முன்னிறுத்தினாலும், அந்த வேதாகமம் இன்று நம் கையில் இருப்பதற்கே திருச்சபையின் பாரம்பரியம் தான் அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
வேதாகமத்தில் உள்ள எந்தப் புத்தகத்திலாவது "வேதாகமத்தில் இந்த 66 புத்தகங்கள் தான் இருக்க வேண்டும்" என்ற பட்டியல் வரிசைப்படுத்தப்படவில்லை. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற திருச்சங்கங்களில் (Councils like Hippo and Carthage), புனித ஆவியானவரின் வழிநடத்துதலோடு திருச்சபை பிதாக்களும் பாரம்பரியமும் தான் இன்று நாம் வாசிக்கும் 27 புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை அங்கீகரித்தன.
(2 தெசலோனிக்கேயர் 2:15)
"சகோதரர்களே, நிலைத்திருங்கள்; நாங்கள் வாய்மொழியாகவோ கடிதம் வழியாகவோ உங்களுக்குக் கற்பித்த பாரம்பரியங்களை (Traditions) உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்."
வேதாகமம் திருச்சபையை "சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் இருக்கிறது" (1 தீமோத்தேயு 3:15) என்று அழைக்கிறது. எனவே, வேதாகமத்தைத் தொகுத்து, அதைப் பாதுகாத்து நமக்கு வழங்கியது பாரம்பரியமே. பாரம்பரியம் இல்லையெனில், 66 புத்தகங்களின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும்.
Part 2 will continue in next post
0 Comments