கிரேஸ்கே Crescens Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 151
கிரேஸ்கே: நம்பகமான சேவை

1. பெயர்:  
கிரேஸ்கே Crescens

2. அர்த்தம்: 
பெருகுபவர்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
2 தீமோத்தேயு 4:10 –தேமா உலக ஆசைகளால் பவுலைக் கைவிட்டுச் சென்றுவிட்ட வேளையிலும், கிரேஸ்கே தேவ பணியை நிறைவேற்றும்படி கலாத்தியா நாட்டிற்குப் பயணமானார்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• பவுல் அப்போஸ்தலருடைய ரோமைச் சிறைவாசத்தின் இறுதி நாட்களில் அவருடன் கூட இருந்த உழைப்பாளிகளில் இவரும் ஒருவர்.
• இவரைப்பற்றி புதிய ஏற்பாட்டில் இந்த ஒரு வசனத்தில் மட்டுமே நேரடியாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், இவர் பவுலின் நம்பிக்கைக்குரிய மற்றும் சுவிசேஷப் பணியில் உதவியாய் இருந்த ஒரு விசுவாசப் பணியாளராக அறியப்படுகிறார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
திருச்சபை வரலாற்றில் சிலரின் பெயர்கள் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் (தேமாவைப் போல உலகத்தை நேசித்து பின்வாங்கிப் போகாமல்), அமைதலாகவும் நம்பிக்கையுமாகக் கர்த்தருடைய பணியைச் செய்யும் விசுவாசிகள் கடவுளுக்குத் தேவை. கிரேஸ்கே பவுலின் இக்கட்டான சூழ்நிலையில் கலாத்தியாவுக்குச் சென்று இறைப்பணி செய்தார்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments