அர்க்கிப்பு • Archippus • Bible Characters

 திருமறையில் யார் இவர் யாரோ? - 143

அர்க்கிப்பு: எச்சரிப்போடு செய்யும் இறைப்பபணி


1. பெயர்:  

அர்க்கிப்பு • Archippus

2. அர்த்தம்: 

குதிரைகளின் தலைவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)

பிலமோன் 1:2 (சக போராளி/சேவகன்)

கொலோசெயர் 4:17 (கர்த்தருக்குள் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற எச்சரிக்கப்பட்டவர்)

4. வரலாற்றுக் குறிப்புகள்

• கொலோசெய் சபையைச் சேர்ந்தவர்; பிலேமோன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.

• பவுல் இவரைத் தன் "சக போராளி" என்று குறிப்பிடுகிறார். இவருக்குச் சபையில் ஒரு குறிப்பிட்ட ஊழியப் பொறுப்பு இருந்தது

• ஆதி திருச்சபையின் வரலாற்றுக் குறிப்புகளின்படி, அர்க்கிப்பு பிற்காலத்தில் கொலோசை பகுதியில் விசுவாசத்திற்காகக் பாடுபட்டு, கர்த்தருக்காக மரித்த ஒரு தியாகியாகவும் (Martyr) கருதப்படுகிறார். 

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:

கொலோசெய் சபைக்கு எழுதிய கடிதத்தில், அர்க்கிப்புக்கு ஒரு பிரத்யேகச் செய்தி சொல்லும்படி பவுல் சபையைக் கேட்டுக்கொள்கிறார். அவர் பெற்றுக்கொண்ட ஊழியத்தை அலட்சியப்படுத்தாமலோ, பாதியிலேயே கைவிடாமலோ, முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவசரமான மற்றும் அக்கறையான எச்சரிப்பு இதில் அடங்கியுள்ளது. பவுல் இவருக்கு விடுத்த எச்சரிக்கைக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் தனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை உண்மையாய் நிறைவேற்றி முடித்தார்.

இறையாசி

உங்களோடிருப்பதாக...


மேயேகோ.இன் திருமறை தியானம்

9486810915


தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Bible Characters in Tamil

Tamil Christian Messages

Daily Devotion Tamil

Bible History Tamil

Today's Bible

 Verse Tamil

Tamil Daily Devotion

Post a Comment

0 Comments