32. விமர்சனங்களை கையாளும் திறன் 2 கொரிந்தியர் 10:10 Paul's Lessons

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 32

விமர்சனங்களை கையாளும் திறன்  2 கொரிந்தியர் 10:10

பவுலின் தோற்றத்தையும் பேச்சையும் பற்றிக் சிலர் அவரை விமர்சித்தனர். "அவனது கடிதங்கள் கனமானவைதான், ஆனால் அவன் நேரில் பார்க்கும்போது பலவீனமானவன், அவனது பேச்சு மதிப்பற்றது" என்று குறை கூறினார்கள். ஆனால் பவுல் அத்தகைய விமர்சனங்களால் மனம் தளர்ந்துபோகாமல், தனது பணிகளாலும் நற்செயல்களாலும் அதற்குப் பதிலளித்தார்.

"விமர்சனங்கள் நம்மைத் தோற்கடிக்கக் கூடாது, இன்னும் பலப்படுத்த வேண்டும்." எங்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களுக்காக நேரத்தை வீணடிக்காமல், நமது இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

நம்மைப் பற்றிப் பிறர் கூறும் புறகூறுகளையோ விமர்சனங்களையோ நினைத்து நாம் கலங்குகிறோமா? அல்லது நம் வேலையில் கவனத்தைச் செலுத்துகிறோமா?

"செயலால் விமர்சனங்களை வெல்வதே மிகச் சிறந்த பதிலாக இருக்க முடியும்."

பவுலடிகளார் காட்டிய இந்த உறுதியான வழியில், விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவோம்.

Post a Comment

0 Comments