தப்புவிக்கும் இறைவன்
சங்கீதம் 59 சவுல் ராஜா தாவீதின் வீட்டைக் காவல் காத்து தாவீதைக் கொல்ல இரவில் அவரது வீட்டைச் சுற்றி ஆட்களை அனுப்பிய போது (1 சாமுவேல் 19:11-18) தாவீது எழுதிய "மிக்தா" என்ற இதயப்பூர்வமான சங்கீதமாகும்.
தாவீது தனது உயிருக்கு பயந்து, மிகுந்த அழுத்தத்தில் இருந்தார். சத்துருக்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப் போல ஊளையிட்டு ஊரைச்சுற்றித் திரிவது போல் நடந்து கொண்டனர். அச்சுறுத்தல் இருந்த போதிலும், அவர் கடவுளிடம் திரும்பினார். கடவுளின் பாதுகாப்பை நம்பியிருந்தார்.
இந்த சங்கீதம் பயமுறுத்தும் வேண்டுதலில் இருந்து (வச. 1–10) விடுதலைக்கான நம்பிக்கையான துதிக்கு நகர்கிறது (வச. 11–17). பாதுகாப்பிற்காக கடவுளைச் சார்ந்திருப்பதையும், துன்பத்தில் இறுதி ஆதாரமாக அவரை அங்கீகரிப்பதையும் இது வலியுறுத்துகிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915
0 Comments